Saturday, September 24, 2011

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (15)

நேரம் மாலையாகி விட்டிருந்தது. நான் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த நேரமும் கடந்து, 24 மணித்தியாலங்கள் ஆகி விட்டிருந்தன. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குற்றுயிரும் குலையுயிருமாக சிறைச்சாலைக்கு திரும்பவும் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தத் திகில் காட்சியில் நானும் ஒருவனாக விரைவில் மாற இருப்பது நிச்சயம் என எனது மனம் சொல்லியது.

பொழுது கருகும் நேரம் என்னிடம் வந்த புலி உறுப்பினன் ஒருவன், தன்னுடன் வருமாறு என்னை அழைத்தான். நான் தட்டுத்தடுமாறி எழுந்து அவனுடன் புறப்பட்டேன். எதற்காக அழைத்துச் செல்கிறான் என்பதைக் கேட்க முடியாத நிலை.

சிறைச்சாலைக் கட்டிடத்துக்கு (இந்த வீட்டைப் பல கனவுகளுடன் கட்டிய புண்ணியவான், இந்த மண்ணிலும் தனது வீட்டிலும் வருங்காலத்தில் தமிழர் பெயராலேயே இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்) முன்னால் உள்ள முற்றத்தில் காந்தி ஒரு கதிரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவனுக்கு அருகில், அவனைப் போல நெட்டையான இன்னொருவனும் ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தான். அவர்களைச் சுற்றி வேட்டை நாய்கள் போல ஐந்தாறு புலிகள் நின்று கொண்டிருந்தார்கள். காந்தி சுட்டு விரலைக் காட்டினால் போதும், இலக்கின் மீது பாய்ந்து கடித்துக் குதறிவிடும் தோரணையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகில் வெறுமையாக இருந்த இன்னொரு கதிரையில் என்னை இருக்கும்படி காந்தி கூறினான். நான் தயக்கத்துடன் அதில் இருந்தேன். திரும்பவும் மரியாதை கொடுத்து இருக்க வைத்துவிட்டு, உதைப்பதற்குத்தான் இந்த நாடகமோ என எனது உள்ளம் கருதியது.

காந்திக்கு அருகில் இருந்த நெட்டையன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “என்னைத் தெரியுமா?” என வினவினான்.

நான் “தெரியாது” என்றேன்.

“உங்கடை புத்தகக் கடைக்கு நான் கன தரம் வந்திருக்கிறன். புத்தகம் வாங்க அல்ல. புத்தகம் பாக்கும் சாட்டில் உங்களிட்டை ஆர் ஆரெல்லாம் வந்து போகினம் எண்டு பாக்கிறதுக்காக. அது சரி தில்லை வந்தால் நீங்களும் அவனும்; கடைக்குப் பின்னால் போய் இருந்து கன நேரமாக என்ன கதைக்கிறனிங்கள்?” என அவன் வினவினான்.

“அப்படி ஒண்டும் விசேசமாகக் கதைக்கிறதில்லை, சும்மா பல விசயங்களும் கதைப்பம்” எனப் பதிலளித்தேன்.

“என்னடா எங்களுக்குச் சுத்தப் பார்க்கிறியா? எங்களுக்கு எதிரான திட்டங்கள் தானே போடுறனிங்கள்?” என்று ஆவேசமாகக் கத்திய அவன், என்மீது ஒரு உதை விட்டான். அவனுடைய பலமான உதையால் நான் கதிரையுடன் சரிந்து விழுந்தேன்.

பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றேன். அப்பொழுதுதான் அவதானித்தேன். அந்த நெட்டையனின் இடுப்பில் பிஸ்டல் ஒன்று உறையுடன் தொங்கிக் கொண்டிருந்தது. ‘ஓ! இவன் இயக்கத்தில் ஒரு முக்கியமான ஆள்’ என்பது விளங்கிவிட்டது. இப்படியானவர்களை ஊரிலுள்ள சனங்கள் ‘பிஸ்டல் காய்’ என்று அழைப்பது வழமை. ‘தேசியத் தலைவர்” பிரபாகரன் இப்படியானவர்களின் ‘தகுதி’ கண்டுதான், இவர்கள் பிஸ்டல் வைத்திருக்க அனுமதிப்பது வழமை.

காந்தி திரும்பவும் என்னை அந்த கதிரையில் இருக்கச் சொன்னான். நான் அந்த யம கிங்கிரர்கள் முன்னால் தயக்கத்துடன் மீண்டும் உட்கார்ந்தேன். இப்பொழுது நான் எமது வருங்காலத் (‘தமிழீழ’) தமிழினத்தின் ஒரு குறியீடாக, அவர்களுக்கு முன்னால் கூனிக்குறுகி அமர்ந்திருந்தேன். நிச்சயமாக இந்த கொலைகாரப் புலிகளால், தமிழினம் வருங்காலத்தில் கூனிக் குறுகி அவலப்பட வேண்டிய ஒரு நிலை வரும் என்ற ஒரு எண்ணம், அந்த நேரத்தில் எனக்குள் தோன்றியது.

காந்தி தன்னைச் சுற்றி நின்ற ‘வேட்டை நாய்’களில் ஒன்றை அழைத்து ஏதோ காதுக்குள் சொன்னான். பின்னர் தனக்கருகில் இருந்த நெட்டையனை நோக்கி “உதயன் நீரும் எங்களுடன் வாறீர் தானே?” என வினவினான்.

எனக்கு இப்பொழுது அவனது பெயர் தெரிந்துவிட்டது. (அவன் பருத்தித்துறையைச் சேர்ந்தவன் என்றும், புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முக்கியமானவன் என்றும் பின்னாளில் தெரிந்து கொண்டேன்)

காந்தியால் இரகசியமாக உத்தரவிடப்பட்டவன், திடீரென அங்கு தில்லையை அழைத்துக் கொண்டு வந்து நின்றான். தில்லை கால் சங்கிலியுடன் தத்தித் தத்தி நடந்து வந்து காந்தியின் முன்னால் நின்றார்.

காந்தி தில்லையைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு, “என்ன தில்லை, உன்ரை மணியண்ணையையும் உனக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறம். சந்தோசம் தானே?” எனக் கிண்டலாகக் கேட்டான். தில்லை எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.

“என்னடா மயிராண்டி, நான் சொல்லிறது கேட்கிறதா?” என காந்தி உறுமினான்.

“ம்..” என தில்லை அனுங்கியது மட்டும் கேட்டது.

சிறிது நேரத்தில் அந்த புலி உறுப்பினன் தில்லையை திரும்பவும் சிறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டான்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் என்னிடம் திரும்பிய காந்தி, “அது சரி அந்த அச்சுக்கூட சமான்களையெல்லாம் எங்கை வைச்சிருக்கிறாய்?” எனத் திடீரெனக் கேட்டான்.

நான் “எந்த அச்சுக்கூட சாமான்?” என அவனிடம் வினவினேன்.

“டேய் எங்களிட்டை சுத்தினியோ, பிறகு நேரே கைலாயம்தான் போகவேண்டி வரும். இஞ்சை வாற எல்லாரும் எங்களைச் சுத்திப்போட்டு லேசாகத் தப்பிப் போகலாம் எண்டு நினைச்சுத்தான் வாறவங்கள். பிறகு போகப்போகத்தான் தெரியும் நாங்கள் ஆரெண்டு. மரியாதையாக உண்மையைச் சொல்லிப்போடு. இல்லையெண்டால் பிறகு எங்கடை பொடியன்கள் உன்ரை உடம்பிலை இருக்கிற எலும்பு எத்தனை எண்டு எண்ண வேண்டி வரும்” எனக் கத்தி எச்சரிக்கை விடுத்தான்.

எனக்குச் சிறிது யோசனையாகி விட்டது. ஏனெனில் எங்களிடம் புதிதாக அச்சகம் தொடங்குவதற்கான திட்டம் ஒன்று இருந்ததுடன், அதற்காக கடந்த சில வருடங்களாக தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருந்தோம்.

முதலில் நாம் வைத்திருந்த ‘நொதேர்ண் பிறின்ரேர்ஸ்’ என்ற அச்சகத்தில்தான், ஆரம்ப காலங்களில் எல்லா பிரதான இயக்கங்களின் வெளியீடுகளையும் அச்சிட்டு உதவியிருந்தோம். ஆனால் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு, உமா மகேஸ்வரன் தனியாக ‘புளொட்’ இயக்கத்தை ஆரம்பித்த பின்னர், ஏக காலத்தில் புலிகளின் ‘உணர்வு’ பத்திரிகையையும், புளொட்டின் ‘புதியபாதை’ பத்திரிகையையும் அச்சிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் இரு பகுதியினரும் எமது அச்சகத்துக்கு வரும் நேரங்களில் பிரச்சினைகள் ஏதுமின்றி சுமூகமாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்து நேரடியாக மோதிக் கொள்ளும் ஒரு நிலை உருவாகி வந்தது. அதற்காக இரு பகுதியினரும் ஒரே நேரத்தில் அச்சகத்துக்கு வந்துவிடாதபடி நேர அட்டவணையை நாம் வகுத்ததுடன், தற்செயலாக ஒரே நேரத்தில் வந்தாலும் நேரடியாகச் சந்தித்து விடாதபடி இருக்க, அச்சகத்தில் இரு வேறு பகுதிகளையும் அவர்கள் எம்முடன் அமர்ந்து பேசுவதற்கு வசதியாக ஒதுக்கி வைத்திருந்தோம். இருந்தாலும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எனவே அவர்களுக்கிடையிலான மோதல் எங்கள் அச்சகத்தில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அச்சகத்தை மூடிவிடத் தீர்மானித்தோம்.

இதற்கு வசதியாக 1981 ய+ன் 4ஆம் திகதி நடந்து முடிந்த யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்கள் யாழ் நகரைத் தீக்கிரையாக்கி செய்த அட்டூழியத்தைக் காரணமாக வைத்து, எமது முடிவைச் செயற்படுத்தத் தீர்மானித்தோம். யாழ்ப்பாணத்தில் எமது அச்சகம் மட்டுமே தீவிரவாத தமிழ் இளைஞர் இயக்கங்களின் வெளியீடுகளை அச்சிட்டுக் கொடுத்திருந்தபடியால், அதைச் சாக்காகக் கொண்டு, ஐ.தே.க குண்டர்கள் எம்மைக் குறிவைத்துத் தாக்கலாம் என்ற காரணத்தை முன்வைத்து, நாம் எமது அச்சகத்தை மூடி வேறு இடத்துக்குப் பொருட்களை அப்புறப்படுத்தி, பின்னர் அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டோம்.

எமது அச்சம் நியாயமானது என்பதை, ‘புதிய பாதை’யை வெளியிட்டு வந்த சுந்தரத்தை சித்திரா அச்சகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்ததின் மூலம், பின்னர் புலிகள் நிரூபித்து விட்டனர். நாம் அச்சகத்தை விற்காது இருந்திருந்தால், அந்தக் கொலை எங்கள் அச்சகத்தில்தான் நிகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அது நடந்து வெகு காலத்திற்குப் பின்னர்தான், நாம் மீண்டும் அச்சகம் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருந்தோம். அதற்காக அச்சுயந்திரத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிலிருந்து தோழர் ஒருவர் மூலம் பெற்றிருந்தோம்.

அந்தத் தோழர் வேறு யாருமல்ல. அன்றைய காலகட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அத்தனை போராளிகளுக்கும் நன்கு பரிச்சயமான தோழர் வி.விசுவானந்ததேவன் அவர்களே அவர்.

வடமராட்சியிலுள்ள கல்லுவம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடப் பட்டதாரியுமான அவர், பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்தே இடதுசாரிக் கருத்துகளில் ஈடுபாடு கொண்ட ஒருவராவார். எமது முன்னைய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த அவா, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நா.சண்முகதாசனின் தவறான போக்குகளுக்கு எதிராக நடந்த உள்கட்சிப் போராட்டத்தில் எம்முடன் உறுதியாக நின்றதுடன், அதன் காரணமாக பின்னர் உருவான எமது மார்க்சிச – லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.

1970களில் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர், அநேகமாக எல்லா இடதுசாரிக் கட்சிகளும் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டில் சென்று கொண்டிருந்த போது, எமது கட்சி மட்டுமே அதில் விசேட கவனம் செலுத்தியது. இனப்பிரச்சினை சம்பந்தமாக எமது கட்சி கொழும்பில் இரண்டு நாள் விசேட மாநாடு நடாத்தி ஆராய்ந்ததுடன், தமிழ் மக்களின் தேசிய – ஜனநாயக உரிமைகளுக்குப் போராடுவதற்காக, ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற வெகுஜன அமைப்பையும் 1975ஆம் ஆண்டிலேயே உருவாக்கியிருந்தது.

அந்த அமைப்புக்குப் பொறுப்பாகக் கட்சியால் நியமிக்கப்பட்டிருந்த தோழர்களில் விசுவானந்ததேவனும் முக்கியமான ஒருவராவார். பின்னர் அந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி தான், விசுவானந்ததேவனின் முன்முயற்சியால் ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயற்பட்டு வந்தது. அது வேறு கதை.

இப்பொழுது காந்தி என்னிடம் கேட்டது, தோழர் விசுவானந்ததேவன் நீணடகால நோக்கில், எமது அரசியல் வேலைகளுக்குப் பயன்படும் வகையிலும், பொருளாதார வருவாயை ஈட்டுவதற்காகவும், எமக்காகப் பல சிரமங்கள் மத்தியில் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து தந்த அந்த அச்சகப் பொருட்களைத்தான். அந்த விசுவானமான மனிதன், புனித கைங்கரியத்துக்காகக் கொண்டு வந்து தந்த அந்த அச்சகப் பொருட்களை, யாரும் அபகரித்துவிடாமல் இருப்பதற்காக, கடந்த பல வருடங்களாக - இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்த காலத்திலிருந்து நாம் எடுத்து வந்த முயற்சிகளே ஒரு சரித்திரம் ஆகும்.

தொடரும்

Tuesday, September 20, 2011

ஜெனிவா புலி வியாபாரம் படு தோல்வி - புலிகோமாழிகள்!

Tuesday, September 20, 2011
ஜரோப்பாவில் ஒரு மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஜெனிவாவில் புலிகளின் அனைத்துலக செயலகப்பிரிவினர் ஜரோப்பிய தமிழர் தம்முடன் இருப்பதாக காட்ட ஒரு ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்தனர். ஜரோப்பாவின் 8 நாடுகளில் இருந்து பஸ்களில் சென்றனர். ஆனால் பல பஸ்களில் 30 பேர் 40 பேர் அதிக பட்டம் 50 பேருக்கு மேற்படாமலே சென்றனர். ஒரு நாட்டில் இருந்து 01 பஸ் சகிதமே சென்றது. உண்மையில் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆயிரத்தை தான்டவில்லை என கலந்துகொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர். 10 ஆயிரம் தமிழர் கலந்துகொண்டதாக தமிழ் இணையத்தளங்கள் புலுடாவிடுகின்றன. 10 ஆயிரம் தமிழர் கலந்துகொள்வதானால் 10 நாடுகளில் இருந்து முறையே ஆயிரம் தமிழர் போயிருக்க வேண்டும். ஆயிரம் தமிழர் ஒரு பஸ்சில் போகமுடியாது. ஆககுறைந்தது ஒரு நாட்டில் இருந்து 10 பஸ்கள் புறபட்டிருக்க வேண்டும். 10நாடுகளில் இருந்து 100 பஸ்களில் பொதுமக்கள் வந்திருக்க வேண்டும். பிரபாகரன் கற்பனையில் ஜரோப்பிய தமிழருக்கு தமிழீழம் காட்டியது போல புலத்திலும் தமிழ் இணையங்களும் புலி கொடிகளும் பிரபாகரனின் படத்தை காவும் கோமாழிகள் சிலரும் தமிழீழத்தை புலத்தில் 10 ஆயிரம் தமிழருக்கு காட்டிவிட்டதாக சுய இன்பம் காண்கின்றனர்

Monday, September 19, 2011

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டம் கிடைக்குமா...?.(சாகரன்)

Monday, September 19, 2011
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இன்று வரை தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்மந்தமான வரைபுகள் ஏதும் இல்லை என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாக புலிகளின் தேசியம் பேசும் பலரும் இதனை அறிந்திருக்கவில்லை, அறியவும் விரும்பவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்த கையோடு நிபுணர் குழுவொன்றை அமைத்து தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்ட வரைதலை மேற்கொள்ளப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ‘பீற்றி’க் கொண்டனர். தமது 'மக்கள்' க்கான நலன்களை கவனிப்பதற்காக நேரங்களை செலவிடுவதில் மட்டும் இந்தியா என்றும் கொழும்பு என்றும் 'லங்காசிறீ’என்றும் அலைந்து திரிந்தனர். கூடவே புலம் பெயர் தேசத்து தங்கள் சாகாக்களிடம் இருந்து வரும் டாலர்களை உறுதிப்படுத்த அறிக்கைகளும்; ஐரோப்பிய, இலண்டன் பயணங்களை மட்டும் மேற்கொண்டனர். கூடவே மகிந்த அரசுடன் பின்கதவால் தமக்கான சலுகைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

யூ.என்.பி அரசியல் தீர்வு வரைதலை பற்றி எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. ஆளும் கட்சியாக இருக்கையில் தமிழர் தரப்பு ஓற்றுமையை குலைக்க தமிழ் மக்கள் தரப்பில் ஒரு சக்தியை இனம் கண்டு அவர்களை கொண்டே மற்றவர்களை பலவீனப்படுத்தி மற்றவர்களை இல்லாமல் செய்வர். அந்த தந்திரோபாய(ண)ம் டட்லி காலத்திலிருந்து ஜேஆர், பிரேமதாசா காலத்தினூடு பயணித்து ரணில் வரையும் நீண்ட வரலாறு உண்டு. தமிழ் காங்கிரசை 'இல்லாமல்' செய்ய தமிழரசுக் கட்சியை பாவித்ததையும், தமிழர் விடுதலைக் கூட்டணியை பலவீனப்படுத்த ஆயுதம் ஏந்திய இயங்கங்களை பணன்படுத்தியதும், பின்பு புலிகளைக் கொண்டு ஏனைய இயக்கங்களை 'இல்லாமல்' செய்தலையும், இறுதியாக கருணாவை பிரித்து புலிகளை இல்லாமல் செய்ய அடித்தளம் இட்டது என்று சொல்லிக் கொண்டே போகலாம். யூஎன்பி இதனைச் 'சாதிப்பது' இற்கு ஏற்ற சூழல்கள் அவ் அவ் காலகட்டத்தில் தமிழர் தரப்பிலும் இருந்தன என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

யூ.என்.பி எதிர் கட்சியாக இருக்கையில் அரசியல் தீர்வை கொண்டு வாருங்கள் என்று கத்துவதை தமிழ் மக்களின் நண்பன் என்று காட்டுவதற்காக மட்டும் செய்யும். ஆளும் கட்சி அரசியல் தீர்வுத் திட்டத்தை? கொண்டு வரும் போது உராய்வு விசைபோல் எதிர் திசையில் மட்டும் செயற்படுவது இவர்களின் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான அரசியல் நிலைப்பாடாகும். தீர்வுத் திட்டங்களை எதிர்த்து பாதயாத்திரை செல்வது (பண்டா செல்வா ஒப்பந்தத்ததை எதிர்த்து ஜே.ஆர். ஜெயவர்தனா கண்டி யாத்திரை செய்தது.) குறும் தேசியவாதிகளுடன் சேர்ந்து குழப்புவது (இலங்கை - இந்தி ஒப்பந்த செயற்பாட்டை பிரேமதாஸ புலிகளுடன் சேர்ந்து செயற்பாடு இல்லாமல் 'சாகடிக்க' செய்தது.) அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வுத் திட்டத்தை கொழுத்துவது (சந்திரிகா அம்மையாரின் அரசியல் தீர்வுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் யூஎன்பி கைகோர்த்து கொழுத்தி இல்லாமல் செய்தது.) போன்ற வரலாற்றை மட்டுமே தமக்குள் கொண்டிருக்கின்றனர். இதனையே வருங்காலத்திலும் தொடருவர். இவர்களின் இவ்வாறான் செயற்பாட்டிற்கான ஆலோசனை, ஆதரவு, ஒத்துழைப்பு எல்லாம் மேற்கத்திய நண்பர்கள் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டு இருப்பர். இதற்கு புலம் பெயர் தேசத்து 'நாடு கடந்தவர்கள்' உம் அவர்களின் வழித் தோன்றல்களும் மக்களை எமாற் றி தமது பிழைப்புக்களைத் தொடர உதவிகள் செய்து கொண்டு இருப்பர்.

இதைப் போலவே ஜேவிபி யிடமும் எந்த அரசியல் தீர்வுத் திட்ட வரைதலும் இல்லை. இவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு செய்தது எல்லாம் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாணசபையை 'சட்டத்தை' பாவித்து பிரித்து வைத்ததுதான். இவர்களின் செயற்பாட்டிற்கும் யூ.என்.பியின் செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. இனிமேலும் இருக்கப் போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு என்று பிரத்தியேக பிரச்சனைகள் இல்லை என்பதே இவர்களின் தமிழ் மக்கள் சம்மந்தமான அரசியல் நிலைப்பாடு ஆகும். பலவீனமான நிலையிலிருந்தாலும் இலங்கையின் இடதுசாரிகள் தொடர்ந்தும் இலங்கைவாழ் சகல மக்களின் சம, சக வாழ்விற்கு தொடர்ந்தும் தம்மால் இயன்றவரை 'போராடி' க் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி (முழுமையற்ற) அரசியல் தீர்வுத் திட்டங்களை தன்னக்கத்தே கொண்டிருப்பினும் இதுவரை தைரியத்துடன் முன்னோக்கி சென்று அமுல்படுத் தவில்லை. இது பண்டாரநாயக்கா காலத்திலிருந்து சந்திரிகா காலத்தினூடாக பயணித்து இன்று மகிந்த சகோதரைய காலத்தில் வந்து நிற்கின்றது. எவ்வளவு குறைவான தீர்வை எவ்வளவுக்கு காலம் தாழ்த்தி கொடுத்தல் என்ற பௌத்த, சிங்கள தேசியவாத இரும்புத்திரை ஊடான பார்வை யை சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் மீற விரும்பவில்லை. இரும்புத்திரை ஊடான பார்வையை விலக்கி சாதனைகள் படைப்பார் மகிந்த சகோதரைய என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் இன்று இழந்து வருகின்றனர் என்பதே யதார்த்த நிலை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டுள்ள பொது சன ஐக்கிய முன்னணி யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் அரசியல் தீர்வுத் திட்டத்திற்காக அடிக்கல்லைக் கூட நாட்டவில்லை. மாறாக சர்வ கட்சி மகாநாடு, நல்லிணக்க ஆணைக்குழு, தமிழ் தேசிக் கூட்டமைப்புடன் மட்டும் பேசுதல், பாராளுமன்றக் குழு அமைத்து செயற்படுத்தல் என்ற 'புலுடா' க்களை மட்டும் விட்டு வருகின்றது என்றே தமிழ் பேசும் மக்கள் நம்பவேண்டியுள்ளது. தம்மிடம் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சகல கட்சிகளையும் அழைத்து பேசுதலில் ஆரம்பித்து கால வரையறைக்குள் பேசி முடிதல் என்ற செயற்பாட்டை இலங்கை அரசு மேற் கொள்ள வேண்டும். இதற்கு இந்தியா போன்ற 'நட்பு' நாடுகளின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருணா அம்மானைக் கொண்டு தமிழ் பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை, தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான பிரச்சனைகள் இல்லை என்றும் அறிக்கைகள் விடுவதை தவிர்த்திருக்க வேண்டும். கூடவே தமது கட்சிக்குள் இருக்கும் பேரினவாத சக்திகளைக் கொண்டும், தமது கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு இனவாதம் பேசுவதையும் தவிர்த்திருக்க வேண்டும். மேலும் சீனாவை காட்டி இந்திவை பணியவைக்கும் 'தந்திரோபாய' அரசியலையும் தவிர்த்திருக்க வேண்டும். இவ்வாறு செயற்பட்டிருந்தால் அரசியல் தீர்வுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல் என்ன கட்டடமே இன்று எழுப்பி இருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேலாவது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டதை ஏற்படுத்துவதில் சரியான திசைவழியில் மகிந்த சகோதரைய பயணிக்க வேண்டும் என்பதே எமது எமது நியாயாதிக்க எதிர்பார்ப்பு ஆகும்.

இப்படிச் செயற்பட்டால் உள்ளூர்ராட்சி தேர்தலில் மட்டும் என்ன பாராளுமன்னத் தேர்தலிலும் தமிழ் பிரதேசங்கள் எங்கும் இன்னும் பல மேலதிக ஆசனங்களை பொது சன ஐக்கிய முன்னணியால் கைப்பற்ற முடியும். அபிவிருத்தியென்று தமிழ் அமைச்சரும், பசில் ராஜபக்ஷவும் தமிழ் பிரதேசம் எங்கும் 'டோரா' போட்டு சாதிக்க முடியாததை இனிவரும் காலங்களில் சாதிக்க முடியும். இதனை மகிந்த சகோதரையா உணருவாரா? உணர வேண்டும் என்பதே எம் அவா. அன்றேல் சனல் 4 என்றும், போர்க்குற்றம் என்றும் புலம் பெயர் தேசத்து புலிகளின் சொந்தக்காரர்கள் இன்னும் மேற்குலகின் ஆதவுடன் சீனாவையும் காரணம் காட்டி தமது பிழைப்பையும் நடாத்திக் கொண்டு இருப்பர். பாவம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள். மகிந்த சகோதரையாவிற்கு இது மிரட்டல் அல்ல வேண்டுகோளே. தமிழ் மக்களின் விடிவிற்காக, நன்மைக்காக கடந்த 30 வருடங்களாக போராடி வரும் நாங்கள் இதனையும் செய்யத் தயாராக இருக்கின்றோம்.

(Saakaran) (புரட்டாசி 18, 2011 )
(sooddram.com)

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்-செனாலி வடுகே!(2)

Monday, September 19, 2011
குவான்ட்டனாமோ பே மற்றும் டிகொ கார்சிகா ஆகியனவே அமெரிக்கா சிறைக்கைதிகளை வைத்திருக்கும் சில சிறைக்கூடங்களில் நன்கு அறியப்பட்டவை. அங்குள்ளவர்களின் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. அவர்கள் குற்றச்சாட்டுகளோ, வழக்கு விசாரணைகளோ இன்றி காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலிருந்து தனியார் விமானங்கள் மூலம் சமுத்திரத்தைத் தாண்டி கவனமாகக் கொண்டுவரப்பட்டு யாருக்கும் தெரியாமல் இந்தச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க அரசாங்கம் தெரிவிப்பது அவர்களை விடுதலை செய்யவோ அல்லது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று. அப்படியான 3000 மேற்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் அங்குள்ளனர். சிறைக்கைதிகள் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டது, வெளிப்பொருட்கள் மூலம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது, வாய்ப்பட்டிகள் அகற்றப்பட்ட நாய்களைப் பயன்படுத்தி கடிப்பிக்கச் செய்து பலத்த காயங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மற்றும் சாகும் வரை அடித்துத் துன்புறுத்தியது போன்ற சித்திரவைதைகளை பாக்தாத்தின் மேற்கேயுள்ள ‘அபு காரைப்’ சிறையில் மேற்கொண்டதாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. பெண் கைதிகள் தாங்கள் படும் அவமானங்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு விஷத்தைக் கடத்திக் கொண்டுவந்து தரும்படி தங்கள் உறவினர்களிடம் கெஞ்சினார்கள் என்றும் கூறப்பட்டள்ளது.

சித்திரவதை மற்றும் பிற கொடூரங்களான மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான நடவடிக்கைகள் அல்லது தண்டனைகள் போன்றவற்றுக்கு எதிரான மாநாட்டில் உறுதி செய்யப்பட்ட சீ.ஏ.ரி (கற்) உடன்படிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதலளித்திருப்பதை பிளேக் மறந்து விட்டாரா. சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள், மற்றும் உள்நோக்கோடு செய்யப்படும் கொலைகள் என்பன அமெரிக்கா ஒப்புதலளித்திருக்கும் ஜெனிவா மாநாட்டு உடன்படிக்கைக்கு எதிரான கடுமையான மீறல்கள். இத்தகைய மீறல்களையும் அமெரிக்காவின் 1996ம் ஆண்டின் யுத்தக் குற்றச்சாட்டுகள் சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றங்களாகக் கருத முடியும். அமெரிக்கப் பிரஜைகள் வெளிநாடுகளில் யுத்தக்குற்றம் புரிந்தால் பாதிக்கப்பட்டவர் மரணமடையும் பட்சத்தில் யுத்தக்குற்றம் புரிந்தவர் ஆயுட்கால சிறைத்தண்டனைக்கோ அல்லது மரண தண்டனைக்கோ ஆட்பட நேரும். ஆனால் எங்களுக்குத் தெரியும் சில அமெரிக்கர்கள் அமெரிக்க அரசாங்கம் தொடர்புபட்டிருக்கும் சித்திரவதை மற்றும் கொடூரச் செயல்களைப் பழித்துரைக்கிறார்கள் என்று –

300 சட்டவாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மற்றும் சட்டப் பேராசிரியர்கள், ஒரு முன்னாள் எப்.பி.ஐ பணிப்பாளர், ஒரு முன்னாள் சட்டமா அதிபர், அமெரிக்க சட்டக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் ஏழு பேர்கள் கூடிச்சேர்ந்து அப்படியான ஒரு அறிக்கையில் ஒப்பமிட்டுள்ளார்கள். எப்படியிருந்தாலும் மொத்தத்தில் ஈராக்கில் ஒரு யுத்தம் நடக்கவில்லை – அது தவறான குற்றச்சாட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு படையெடுப்பு – சதாம் ஒரு பயங்கரவாதியல்ல – முன்னர் அவர் ஒசாமா பின்லாடனைப்போல ஒரு அமெரிக்க உளவுத்துறை முகவர். அமெரிக்க ஊடகங்கள் இந்த உண்மைகளையெல்லாம் அமெரிக்க மக்களிடமிருந்து சாதுர்யமாக மறைத்தன. மற்றும் பொய்களை நம்பவைத்து வசியப்படுத்தும் ஒரு நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

சமத்துவம், சுதந்திரம், மற்றும் மனித உரிமைகள் உள்ள நாடு என்று தற்பெருமை பீற்றிக் கொள்ளும் ஒரு நாட்டில் 9ஃ11 சம்பவத்தைத் தொடர்ந்து அராபியர்கள், முஸ்லிம்கள் தெற்காசியர்கள் என்று சுமார் 1200 பேரைச் சுற்றி வளைத்தது பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள். காவற்துறை கண்காணிப்பாளர் நாயகத்தின் நீதித்துறை திணைக்கள அலுவலகத்தினால் தொகுக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க குடியுரிமையற்ற கைதிகளுக்கு உடல் மற்றும் வாய்வார்த்தைகளால் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் மேலும் மத்திய சிறைகள் பணியகம், மாநகர காவல் மையங்களிலுள்ள அலுவலர்கள் தடுப்புக்காவலில் இருந்தவர்களை சுவர்களுக்குள் நுழைத்து திருப்பியதாகவும், அவர்களின் கைகள், மணிக்கட்டுகள் அல்லது விரல்களை முறுக்கி அல்லது திருப்பி அவர்களது பெருவிரல்களை பின்னாலிருந்து இழுத்து வளைத்ததாகவும் மற்றும் அவர்களை தரையில் போட்டு இழுத்ததாகவும் அத்தோடு தகாத வார்த்தைகளால் திட்டி தவறாக நடத்தியதாகவும் கண்டறிந்துள்ளது. சுதந்திரமான நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில் இப்படியான செயல்கள் எப்படி நடக்கலாம்?

ஸ்ரீலங்காவுக்கு மாறாக இது உள்ளது. ஆம் எங்களிடம் எல்.ரீ.ரீ.ஈ எனக் கூறப்படும் ஒரு இயக்கம் இருந்தது. அது சிங்களவர்களுக்கு எதிராக மட்டும் போராடவில்லை, தமிழர்களிடத்தில் அது பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்தே அதை தெளிவாக நிரூபிக்கலாம். எல்.ரீ.ரீ.ஈ யின் கொலைவெறி யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து, தமிழ் அரசியல்வாதிகள், ஆசிரியர்கள்;, மதகுருமார், மற்றும் ஸ்ரீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உட்பட பலர் அதன் கொலைவெறிக்கு ஆளானார்கள். இந்த மிதவாத சிந்தனையுள்ள தமிழ் அரசியல்வாதிகளைக் கொல்வதன் மூலம் மற்றைய தமிழ் அரசியல்வாதிகளையும், எல்.ரீ.ரீ.ஈ உயிர்ப்பயத்துக்கு ஆளாக்குவதில் வெற்றி பெற்றிருந்தது, தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளை போல இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. இதற்கு மேலதிகமாக எல்.ரீ.ரீ.ஈ என்ற குழு உண்மையில் அதன் பிரிவினைவாதம் என்கிற கருவை இலங்கைத் தமிழரசுக் கட்சி என்கிற அரசியற்கட்சியிடமிருந்துதான் கடத்தல் செய்திருந்தது (ஸ்ரீலங்காவில் ஒரு தனியரசை ஊக்குவிப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி 1940 களில் ஆரம்பிக்கப்பட்டது). எல்.ரீ.ரீ.ஈக்கு ஒட்சிசன் வழங்கி உயிர் கொடுத்தது.

இப்பொழுது எமது நண்பர் என்று உறவு கொண்டாடும்; எமது சொந்த அயல் நாடான இந்தியாவேதான், மற்றும் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டதும் ஊககுவிக்கப்பட்டதுமான 30 வருடப் தீவிரவாதத்தை ஸ்ரீலங்கா மக்கள் மறந்து விடுவார்கள் என இந்தியா நினைக்கிறது. ஸ்ரீலங்காவால் மட்டும் தனியாக அதன் இறையாண்மையை உறுதி செய்ய முடியுமாக இருந்திருந்தால், இந்தியா ஒரு தேர்வாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது. நாங்கள் இந்தியாவை ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம். மற்றும்; இந்தியா எந்த வகையிலான இராஜதந்திர உறவுகளையோ, பொருளாதார உறவுகளையோ ஏற்படுத்திக் கொள்ள விரும்பினாலும் பெரும்பான்மை மக்கள் இந்திய - எல்.ரீ.ரீ.ஈ உறவுகளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு இந்தியா மாறிவிட்டது என்று கூறப்படும் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை. ராஜீவ் இறந்தது, 1991ல் 20 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் மரணமான உடனேயே எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதற்கான சக்தியும் திறமையும் இந்தியாவிடமிருந்தது. ஆனால் ஸ்ரீலங்காவுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ யினைப் பயன்படுத்த இந்தியா முன்னுரிமை வழங்கவில்லை என்பது வெளிப்படுத்துவது இந்தியாவை ஒருபோதும் நம்பமுடியாது என்பதையே.

எல்.ரீ.ரீ.ஈயின் வீழ்ச்சி ஏற்பட்டது மே 2009லியே, இராணுவத்தினர் எல்.ரீ.ரீ.ஈயின் போராளிகளை சிறைப்பிடித்த அதேவேளை மற்றவர்கள் தங்களை முன்னெப்போதுமில்லாத இந்த மனிதாபிமான மீட்பு நடவடிக்கையில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஒப்படைத்துக் கொண்டார்கள். அந்தப் பெருந்தன்மையான நடவடிக்கையின் கணக்கில் மேற்கத்தைய நாடுகள் அதிர்ச்சியடைந்து நின்றன, அவர்களின் தற்காப்பு யாவும் அந்தப் பெருந்தன்மையான மீட்பு நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளைக் காண்பது மாத்திரமே. அந்த வேளையில் கொலை செய்வது அல்லது கொல்லும்படி ஆணை பிறப்பிப்பதுதான் தனியுரிமையாக இருந்திருந்தால் ஏன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வீரர்கள்; தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும், அவர்களால் வெகு சுலபமாக கண்ணில் கண்ட அனைவரையும் சுட்டுத் தள்ளியிருக்கலாமே. பெண்கள், குழந்தைகள், ஆடவர்கள் ஆகிய அனைவரும் பாதுகாப்பாக நிலத்தையும் அதேபோல சதுப்பு நிலப் பரப்பையும் கடந்து வருவதற்காக அந்த வீரர்கள் தொலைவிலிருந்து ஏன் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்?

ஸ்ரீலங்கா அரசாங்கம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்களின் மறுவாழ்வுக்காக செலவழித்துள்ளது. 11,700 எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் சரணடைந்தார்கள்... அவர்களைக் கொல்வதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் இன்று அவர்கள் உயிரோடிருந்திருப்பார்களா? இவர்களில் 7969 பேர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 2879 பேர்கள் மறுவாழ்வு முகாம்களில் உள்ளார்கள். அந்த மறுவாழ்வு நடவடிக்கையில் கட்டிட நிhமாணத் தொழில், கைத்தொழில் வேலைகள், மற்றும் பூச்சு வேலைகள் போன்றவை தொழிற் பயிற்சியாகப் பயிற்றப்படுகின்றன. அதேபோல தொழிற்பயிற்சியுடன் அவர்களின் தொழிற்திறனையும், கல்வியறிவையும் வலுப்படுத்துவதற்காக மொழி மற்றும் தொடர்பாடல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. எல்.ரீ.ரீ.ஈ அவர்களுக்கு எதைப் போதித்தது, கொலை செய்வதற்கு மட்டுமே.

2010ல் எல்.ரீ.ரீ.ஈ யினை வெற்றிகொண்ட ஒரு வருடத்தின் பின் மறுவாழ்வு அளிக்கப்பட்ட 400 எல்.ரீ.ரீ.ஈ பெண்போராளிகள் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டார்கள். 2011ல் 108 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார்கள் அதேவேளை 50 விகிதத்திற்கும் அதிகமான மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் 2010ல் நடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்தார்கள். கடந்த மாதம் (ஆகஸ்ட் 2011ல்) மறுவாழ்வு பயிற்சி பெற்ற 152முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் வவுனியா கலாச்சார நிலையத்தில் வைத்து அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். 2010ல் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சடங்கில் வைத்து நூற்றுக்கும் மேலான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் திருமண பந்தத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். வெளிநாட்டு அரசாங்கங்களாலும், திருட்டுத்தனமான நடவடிக்கையாளர்களாலும் உதவிகளைப் பெற்ற எல்.ரீ.ரீ.ஈ எனும் பயங்கரவாத அமைப்பினால் கொலையாளிகளாக மாற்றப்பட்ட ஆண்கள். பெண்கள், சிறுவர்கள் ஆகிய அனைவரையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான சகல முயற்சிகளும் ஸ்ரீலங்காவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளையில், ஸ்ரீலங்காவிலிருந்து தப்பித்துச் சென்ற எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் இறந்து போயிருக்கும் ஒரு அமைப்பிற்கு உயிர் கொடுப்பதற்காக சுற்றி வருகிறார்கள் - தமிழ்நாடு அதன் பயிற்சித்தளமாக மீண்டும் மாறியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த இலட்சியத் திட்டத்தின் எதிhகாலம் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. அவர்கள் தம்மைத்தாமே தீவிரமாக கேட்டுக் கொள்ள வேண்டியது அவர்கள் ஸ்ரீலங்கா வாசிகளா அல்லது இந்தியர்களா என்று. இந்தியர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் தங்களில் ஒரு பகுதியினர் என நினைத்து ஸ்ரீலங்காத் தமிழர்களை விரும்பக் கூடும். ஆனால் பின்னால்; இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா நீர்ப்பரப்பிற்குள் வருவதனால் எழும் பிரச்சனைகளின் விளைவாக அவர்களின் சொந்த மக்கள்மீதே அதிக ஒற்றுமை காண்பிக்கப்பட மாட்டாது. மீன்பிடி ஸ்ரீலங்காத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் வலுக்கட்டாயமாக ஸ்ரீலங்காவின் கரைகளுக்கு மீன்பிடிக்க வருகின்ற தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு நன்மையைக் காட்டிலும் அதிக தீமையையே செய்கிறார்கள். இதற்கு மேலாக தமிழர்கள் இந்தியாதான் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என நினைப்பார்களானால் இந்தியா அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதுதான் விவேகமானது. அவர்கள் இதயங்கள் இந்தியாவிலிருக்கும்போது அவர்கள் ஸ்ரீலங்காவில் வாழ்வதில் அர்த்தமேயில்லை.

அதேவேளை இதே தலைப்பை தமிழ் அரசியற்தலைவர்களிடமும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் எப்படிப் பேரம்பேசுவது என்று ஆலோசனைகளைப் பெற ஒவ்வொரு தடவையும் அவர்கள் இந்தியாவுக்கு விரைந்து கொண்டிருப்பதால் அவர்கள் முதலில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைவு படுத்துவது நல்லது. பாகுபாடு இடம் பெறுகிறது என்கிற கோஷம் எழுமானால், மேற்கிற்கும் இதனூடாகச சென்று பார்ப்பது நல்லது, ஏனெனில் சிலவேளைகளில் தமிழர்களால் கட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளபோது அவர்களால் அதை சிங்களவர்களுக்கு வாடகைக்கு கொடுக்க முடியுமா என அவர்களிடம் கேட்டால், நிச்சயம் அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் அவர்களால் அதைத் தமிழர்களுக்கு மட்டும்தான் வாடகைக்கு கொடுக்க முடியும் என்று. இது மேற்கினால் சிங்களவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடாக இருக்க முடியாதுதான். இருந்தாலும் நாங்கள் புலம் பெயர்ந்தவர்களை இங்கு வந்து உதவிகளைச் செய்யும்படி கேட்பதில் ஆர்வமுள்ளவர்களாகக் காணப்படுகிறோம், இதே புலம் பெயர் சமூகம்தான் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டும் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டும் சுகமாக இருக்கும் அதேவேளை இங்குள்ள தங்கள் சொந்தத் தமிழ் மக்களை பாடசாலைக்குச சென்று கல்விகற்று வாழ்க்கையில் யாரோ ஒருவராக உயர்ந்த இடத்துக்கு வருவதை விடுத்து ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விரும்பியவர்கள்.

எங்கள் ஜனாதிபதி ஸ்ரீலங்காவிலிருந்து பயங்கரவாதத்தை அகற்றி விடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார். அந்த சுதந்திரத்துக்காக ராஜதந்திர முனைகளில் இருந்து வந்த புயல்கள் யாவற்றையும் அவர் தைரியமாக எதிர்கொண்டார். இன்று இந்த நாடு குண்டுத் தாக்கதல்களும் மற்றும் தற்கொலைத் தாக்கதல்களும் அற்ற ஒரு நாடாக மாறியிருப்பதை யாராலும் மறுத்துச் சொல்ல முடியாது. இதுதான் ஸ்ரீலங்கா மக்ககளுக்கு வேண்டியதும் மற்றும் எங்களுக்;கு வழங்கப்பட்டிருப்பதும். மற்றைய நோய்களைப் பற்றிக் கவனத்தில் எடுக்கவேண்டியது பிரஜைகளாகிய எங்களைப் பொறுத்தது. எல்.ரீ.ரீ.ஈ 30 வருடங்களாக ஆண், பெண், குழந்தைகள் என அப்பாவிகளைத் தாக்கியபோது உலகத் தலைவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? அந்தக் குண்டுத் தாக்குதல்களின் போது வெளியிடப்படும் சாதாரண அனுதாபமான ராஜதந்திர அறிக்கைகளை விட எங்களுக்கு இன்னும் அதிகம் தேவைப்பட்டது. நாங்கள் இப்பொழுது அனுபவிக்கும் சுதந்திரத்தில் மேற்கிற்கு ஒரு பங்கும்கிடையாது. நாங்கள் கேட்கக்கூடியதெல்லாம் மேற்கு ஆக்கிரமிப்புச் செய்த நாடுகளை அவை மேலும் தண்டிக்க வேண்டாம் என்றே. அவர்கள் எல்லோரும் அப்பாவியான பொது மக்கள்.

அமெரிக்காவும் அதன் நேச அணியினரும் 2003ல் ஈராக்கில் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்கள். கடந்த 8 வருடங்களாக ஈராக்கிய மக்கள் சதாம் ஹ_சைனின் ஆட்சியிலிருந்ததை விட மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். மற்றும் அமெரிக்கப் பொருளாதாரமும் முற்றாகச் சீர்குலைந்து போயுள்ளது. ட்ரில்லியன்கள் தொகையளவில் கடனில் சிக்கியுள்ள அமெரிக்கா உள்ளபடி மற்றவர்களைத் தட்டிக் கேட்கும் சர்வாதிகாரப் போக்கைத் தாங்க முடியுமா? இந்தப் பயணங்களுக்கான செலவினை ஒரு சிறு சேமிப்பில் போட்டு வைத்தால்கூட அமெரிக்காவை கடன்பளுவில் இருந்து காப்பாற்ற முடியும்.

தமிழில்: எஸ்.குமார்
(thenee.com)

Sunday, September 18, 2011

வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும், புலிகளும்-எஸ்.எம்.எம்.பஷீர்!

Sunday, September 18, 2011
வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும், புலிகளும்-எஸ்.எம்.எம்.பஷீர்!

உலகத்தில் நாட்டில் சமூகத்தில் மனிதர்கள் படும் துயரை நினைத்து இரங்கி ஒரு துளி கண்ணீர் உன்னிடம் வராவிடின்;; எதற்காக நான் பாடிகொண்டிருக்கிறேன்.

என் பாடல் உன்துயரை துடைக்காது மேலும் மூட்டி விடுமாயின் நான் பாடாமல் ஊமையாக இருந்து விடுகிறேன்” குணதாச கபுகே (மறைந்த பிரபல சிங்கள பாடகர்)

1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் காரணமாக பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் குடும்பங்களின் 174 இளைஞர்கள் அவ்வாண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதியும் 23ம் திகதியும் சீருடை அணிந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. இச்சம்பவங்களின் நினைவாக சென்ற ஐந்தாம் திகதி இருபது ஆண்டு நிறைவு நிகழ்வு மத வழிபாடுகளுடன் இடம்பெற்றன என்ற செய்தி பல ஊடகங்களில் வெளிவந்தது. அவ்வாறு கடத்தி செல்லப்பட்ட குடும்பத்தினரில் சிலர் இன்றும் தமது குடும்பத்தில் கடத்திசெல்லப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புவதாகவும் வேறு சிலர் அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பும் காலம் கடந்துவிட்டதாகவும் துயரத்துடன் சொன்ன வார்த்தைகள் இரு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதும் குடும்ப உறவுகளின் அசம்பாவித இழப்புக்கள் ஆறாத துயராக அக்குடும்பத்தினரை வாட்டிவருவதை கோடிடிட்டு காட்டுகிறது விரிவாக பார்க்க

புலிகளுக்கு முன்பே கிழக்கில் ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கினர் அதனால் முஸ்லிம்கள் தமிழ் ஆயத இயக்கங்கள் மீது வெறுப்பு கொண்டனர் அந்நிலையிலே 1985 ஏப்ரல் இன வன்முறைகள் இரண்டு இனங்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலின் வெளிப்பாடாக வெடித்தது. ஆனால் புலிகளின் பரந்துபட்ட முஸ்லிம் மக்களை கிழக்கிலிருந்து இனசுத்திகரிப்பு செய்யும் முயற்சிகளை முடுக்கிவிட்டாலும் கிழக்கின் திகாமடுல்லை மாவட்டம் புலிகளுக்கு சவாலாக அமைந்ததால் மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கில் இலகுவாக முஸ்லிம்களை வெளியேற்றும் தங்களின் முதல் மூலோபாய புள்ளியாக புலிகளால் திட்டமிடப்பட்டது அதற்கிணங்க 1990 ம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலைகளை திட்டமிட்டு கிழக்கு மாகாணமெங்கும் மட்டுமல்ல அதன் வட எல்லைப்புறத்தில் அமைந்த வட மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் கிராமமான அளிஞ்சிப்போத்தானையிலும் புலிகள் மேற்கொண்டனர். ஆயினும் இதனால் பரஸ்பரம் தமிழ் முஸ்லிம் உறவு விரிசல் கண்டாலும்.

அதன் வெளிப்பாடாக பல தொடர்ச்சியான படுகொலைகள் அச்சறுத்தல்கள் ஆக்கிரமிப்புகள் என பலவகையான அழுத்தங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை கிராமம் கிராமமாக வெளியேற்றும் தங்களின் திட்டத்தில் வெற்றிபெறுவதையும் அவர்கள் கண்டுகொண்டனர். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் முஸ்லிம் பகைமை தூண்டப்பட வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்பட்டது. கிழக்கில் தீராத தமிழ் முஸ்லிம் பகைமை ஏற்படுத்துவதனால் தமது தமிழீழ இலக்கை அடைவதற்கான முக்கிய தடைகளில் ஒன்றை நீக்கலாம் என்ற அடிப்படையில் செயற்படுவதற்கு முஸ்லிம் ஊர்காவல் படை இலங்கை இராணுவம் என்பற்றின் தமிழர் மீதான எதிர்வினைச் செயற்பாடு மூலமாக தங்களின் “பங்களிப்பை” செய்வார்கள் என்பதை புலிகள் உணர்ந்து திட்டமிட்டே இதனை செய்தார்கள். அதிலும் இவாறான தமிழ் முஸ்லிம் பகை முரண்பாடு வட மாகாணம் போல் அல்லாது தமிழ் முஸ்லிம் சமூகங்களுகிடையிலே உருவாக்கப் படுவது புலிகளுக்கு மூலோபாய தேவையாகவிருந்தது.

ஆயினும் 1990 ஏறாவூர் படுகொலைகளை செய்ய முன்னர் ஏறாவூர் பிரதேச சபைக்குட்பட்ட தமிழ் பகுதிகளான ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சிகளில் மற்றும் குடியிருப்பு எல்லைப்புற தமிழ் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு வேண்டுகோள் விடுத்த பின்னரே புலிகள் தமது தாக்குதல்களையும் செய்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப்படுகொலைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஆத்திர உணர்வு இலங்கை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது அதனால் ஏறாவூர் தமிழ் பிரதேசத்தில் தமிழ் மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டன இக்கால கட்டங்களில் இரு பிரதேசங்களுக்குள்ளும் இடையில் பிரயாணம் செய்ய நேரிட்ட மக்கள் பரஸ்பரம் புலிகளின் மிலேச்சத்தனமான படுகொலையால் உருவாக்கப்பட்ட இன வெறிக்கும் குரோதத்துக்கும் பாரிய விலையை வழங்க வேண்டி நேரிட்டதுடன் ஒரு நீண்டகாலத்துக்கு பகைமையும் திரட்சி கொண்டது. ஒரு புறம் புலிகள் மிருகத்தனமாக முஸ்லிம் மக்களை படுகொலை செய்தபோதும் அவர்களின் சமூகப் பிரமுகர்களை கடத்தியபோதும் இரரணுவம் கொண்ட “அனுதாபம்” புலிகளால் நசுக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குள் ஒரு சிறு குழுவினரின் தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வழிகோலிற்று.

அதுபோலவே தமிழ் மக்களுக்குள்ளும் தமது குடும்பத்தினரை தமிழ் முஸ்லிம் வன்முறைகளால் மற்றும் கடத்தல்களால் இழந்தவர்கள் புலிகளின் அனுசரணையுடன் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முன்னின்றனர். இதனால் புலிகள் இருக்கும் வரை பதிலுக்கு பதில் நடவடிக்கையாக பல அசம்பாவித சம்பவங்கள் இரண்டு இனத்தவரிடையேயும் நடைபெற்றுள்ளன என மனித உரிமை அமைப்புக்களின் சில பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன 1990 அழிந்சிப்பொத்தனை முஸ்லிம் படுகொலைகளுக்கு எதிர் விளைவாக முத்துக்கல தமிழ் கிராமம் தாக்கப்பட்டது. புலிகள் தமது தேவைகேற்ப முஸ்லிம் உறவை ஒருபுறம் மேல்மட்டத்திலும் கீழ் நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருடன் வெவ்வேறு காலகட்டங்களில் வைத்துக்கொண்டதுடன் சாதாரண தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான சமூக பொருளாதார நடவடிக்கை காரனமான நல்லுறவு நிகழ்வதையும் தந்திரோபாயமாக தடுத்து வந்தனர். இதற்கான பிரச்சாரங்களை தமிழ் மத்திய தர உத்தியோகத்தர்கள் பலரின் அனுசரணையுடனும் தமது கட்டுப்பாடு பிரதேச கண்காணிப்பு நடவடிக்கை மூலமாகவும் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே பின்னர் கூட்டமைப்பு அரசியல் ரீதியாகவும் புலிகளின் இனவாத தமிழ் வகுப்புவாத கருத்தியல்களை முன்கொண்டு செல்ல உதவினர்.

1990 ஆகஸ்து இன வன்முறைகள் ஏற்பட்டு பல அனர்த்தங்கள் நடந்த பின்னர் அவ்வாண்டு இறுதிப பகுதியில் கொழும்பிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் மற்றும் அப்பிரதேச சமூக பிரதிநிகள் சிலரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகதிகளாக உள்ள தமிழ் முஸ்லிம் அகதிகளையும் மற்றும் வன்முறைகளால் மட்டக்களப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெரும் தமிழ் மக்கள் சிலரையும் பார்வையிடுவதற்காக ஒரு விடயம் அறியும் குழு ஒன்று ( Fact Finding Group) விஷேட இராணுவ விமானத்தில் சென்றது. அதில் நானும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது அக்குழுவில் அரசியல் கட்சி பிரமுகர்களில் அணில் முனசிங்க புளொட் சித்தார்த்தன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். ஏறாவூர் பிரதேச தமிழ் மக்கள் அகதிகளாககாவிருந்த வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்ற போது என்னைக்கண்டு எனக்கு மிகவும் தெரிந்த நெருக்கமான குடும்பத்தினர் சிலர் என்னிடம் தங்களின் பிள்ளைகளை குடுபத்தினரை இராணுவத்தினர் விசாரணைக்கு கொண்டு சென்றதையும் அவர்களை கண்டுபிடித்து தர உதவுமாறும் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதிலும் உருக்கமான ஒரு சம்பவம் அங்கிருந்து இராணுவத்தால் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட பலரின் பெற்றோர்கள் உறவினர்களின் மனக் கிலேசங்களை புட்டுக்காட்ட போதுமானது. நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களில் எனது நெருங்கிய நண்பரின் சின்னம்மாவின் ஒரே ஒரு மகனும் அவ்வாறு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர்களுள் ஒருவர். இவரின் தாயும் தந்தையும் என்னை நெருங்கி குழந்தைபோல் அழுதது இன்றுவரை எனது நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர்களுக்கு குழந்தை கிடைக்காமல் பலவருடங்களின் பின்னரே அவர்கள் வழிபடும் கதிர்காம கந்தனை வேண்டி வழிபட்டு (தவமிருந்து என்று சொல்வதுபோல்) பெற்ற குழந்தை தான் அப்பையன் என்று அவ்விடலைப் பருவத்து சிறுவன் சிறு பிள்ளையாக இருந்தபோது எனது நண்பர் சொல்லுவார். இவரதும மற்றும் என்னிடம் கேட்டுக்கொண்ட சிலரதும் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்து அப்போது இராணுவ குடிமக்கள் ஒன்றிணைப்பு (Co-ordinating Officer) உத்தியோகத்தராகவிருந்த அங்கு பிரன்சனமாகவிருந்த முன்னாள் எஸ்.பி (போலீஸ் அத்தியட்சகர்) அப்துல் மஜீதிடம் நான் வேண்டுகோள் விடுத்தபோது அவர் அதுபற்றி மேலிடத்துக்கு அறிவிப்பதாகவும் விசாரிக்க உதவுவதாகவும் கூறினார்.

ஆனால் அந்த வேண்டுதல்களை அவர் விடுத்தாரா அல்லது அவர் அன்றய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் என்ற வகையில் ஏதேனும் விசாரணைகளை தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் மீதோ அல்லது தனக்கிருந்த உத்தியோக அதிகாரத்தை கொண்டோ மேற்கொண்டாரா அல்லது அவ்வாறு கடத்தப்பட்ட சிலரின் குடும்பத்தினர் நம்புவதுபோல் அவர்களில் யாரேனும் இன்றுவரை உயிருடன் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இப்போது மாகான சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாகவிருக்கும் அப்துல் மஜீத் (பொத்துவில்) எதாவது புகாரை மேலிடத்துக்காயினும் அப்போது செய்திருந்தால் அது பற்றி ஏதேனும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவர் தானாக முன்வந்தேனும் தான் அறிந்த செய்திகளை சொல்வதற்கு இனிமேலும் தமதிக்கமுடியாது அந்த சிறுவனின் தாய் பின்னர் நான் அவரை இராண்டாயிரத்தி இரண்டில் சந்த்திக்கும்வரை அவர் மனம் பேதலித்த நிலையிலே காணப்பட்டார், அதே மனநிலையுடன் விரக்தியுடன் என்னிடம் பேசினார். சில வருடங்களுக்கு முன்னர் அவரை சந்திக்க விரும்பி விசாரித்தபோது அவர் இறந்துவிட்டார் என்று கேள்வியற்று வருத்தமுற்றேன்

மேலும் அதே தினத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொக்கட்டிசோலை போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையும் பார்வையிட்டபோது ஜோசெப் பரராஜசிங்கம் அங்கு காயமுற்றோரின் உறவினர்கள் முறைப்பாடுகளை தமிழ் முஸ்லிம் விரோத உணர்வுகளை ஒரு பிரச்சாரமாகவும் அதனை மேலும் எதிர்கால சமூக மீளிணக்கம் கருதி அறிவுபூர்வமாக அணுகாமல் எதிரிடையான அணுகுமுறையுடன் அங்கு அவர் விளக்கமும் வியாக்கியானமும் அளித்தார். மிக தீவிர முஸ்லிம் எதிர்ப்புணர்வு அங்கு காணப்பட்டது. மேலும் ஏறாவூர் முஸ்லிம் அகதி முகாமுக்கு சென்றபோதும் அவர்கள் புலிகளின் படுகொலைகளால் தாம் இழந்த குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சோக உணர்வுகளை தாம் எல்லப்புரங்களிளிருந்து புலிகளின் பயத்தால் அகதியாக வாழும் துன்பங்களையும் இக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டனர். மொத்தத்தில் புலிகளின் அட்டூழியங்களின் அவலங்களை இன விரோத விளைவாக இருபுறமும் காணக்கூடியதாகவிருந்தது இந்த நிலையில் இலங்கை இராணுவ பிரிவின் ஒரு பகுதியினரும் இந்த சூழ்நிலையை தமக்கு ஏதுவாகவும் பயன்படுத்திக்கொண்டனர்.

புலிகள் இயக்கம் கிழக்கில் சிதைவுறும் வரை புலிகள் அவ்வப்போது இராணுவ பிரசன்னத்தின் காரணமாக முஸ்லிம்களுடன் உறவை பேணுவதுடன் அவர்களை தமது ஆயுத பலத்தால் தமது பிரதேச கட்டுப்பாடுகளால் முஸ்லிம் சமூக அரசியல் சமூகக் குரல்களாக செயற்பட்டோரை இனம் கண்டு கடத்தியது படுகொலை செய்ததன் மூலமாக முஸ்லிம்களை எப்போதும் ஒரு அச்ச நிலையில் வைத்துமிருந்தனர். புலிகள் கிழக்கு புலிகளாக பிளவுபட்டதும் ஒரு சுவாச இடைவழி ஏற்பட்டதுடன் முஸ்லிம் தமிழ் உறவு ஆமை கதியிலே நகரத்தொடங்கியது பின்னர் இராணுவ வெற்றிமூலம் புலிகள் கிழக்கில் முழுமையாக தொல்வியுறம் வரை அத்துடன் கிழக்கிலே தமிழ் முஸ்லிம் உறவுக்கு கிழக்கு மாகான சபை ஊடாக அதன் முதலமைச்சர் போன்றோர் தமது நேர்மையான பங்களிப்பை செய்ததன் ஊடாக இன்று அங்கு மீண்டும் சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனவாத அரசியல் சக்தியாக தமிழ் அரசுக்கட்சி இன்றுவரை தமிழர் தாயகம் வட கிழக்கு இணைப்பு என்ற தமிழ் தேசிய கட்டுமானங்களை கைவிடாததால் தனித்து எழும் கிழக்கு தமிழ் முஸ்லிம் அரசியலக்கு பெருத்த சவால்கள் இருக்கின்றன என்பதால் முஸ்லிம் மக்களை தேவைகேற்ப பயன்படுத்தும் தமது அரசியல் தந்திரோபாயங்களில் ஒன்றாகவே பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான உறவை பலப்படுத்தும் தேவை அதற்கு கிழக்கிலே உள்ளது அதற்காக கிழக்கின் முஸ்லிம் அரசியல் அபிலாஷைகளில் சவாரிவிடும் இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தின் சற்று தினங்களுக்கு முன்னர் வரையான அரச எதிர்ப்பும் கிழக்கின் தனித் தமிழ் அரசியல் தலைமத்துவத்திற்கெதிராக முஸ்லிம்களை உருவேற்றும் செயற்பாடுகளும் தமிழ் தேசிய தலைமைகளுக்கு மிகுந்த தேவையாக இருக்கிறது. அதனால் தான் தற்போது அரசு சார்பாக 18 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக மாறியும் சம்பந்தன் தனித்து ஜனாதிபதியை சந்தித்தது , இந்தியா சென்றது வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சேபனை இல்லை என்று பிரச்சாரம் பண்ணிய சூழலிலும் மீண்டும் தாங்கள் சந்தித்து பேசப்போவதாக கூறுவது தமது பரஸ்பர அரசியல் நிகழ்சி நிரல்களில் காணப்படும் ஒற்றுமையை கோடிட்டு காட்டுகிறது. ஆனால் கூட்டணியின் தமிழ் தேசிய அரசில் கிழக்கு முஸ்லிம்களின் தேசிய அரசியலுக்கு என்றுமே ஆபத்தானது. எனவே இன்று மீண்டும் துளிர்த்துவரும் தமிழ் முஸ்லிம் உறவு பொறுப்பற்ற தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் மீண்டும் எதிர் நிலைக்கு இட்டுச்செல்வதனை மக்களே மாற்றியமைக்க வேண்டும்.

1990 ஆகஸ்து மாதம் புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான குறிப்பாக காத்தான்குடி ஏறாவூர் படுகொலைகள் எழுப்பிய அதிர்வலைகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்குற்படுத்தியது. அதனால் அதுவரையும் ஏதோ பாதுகாப்பாக வாழலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த கிழக்கின் சகல சிறு கிராமங்களிலிருந்தும் முஸ்லிம்கள் வெளியேறினர். அவ்வாறான கிராமங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த மிகப்பெரிய முஸ்லிம் கிராமமான உறுகாமம் என்ற கிராமத்திலிருந்து அக்கிராம மக்கள் தங்களால் முடிந்ததை கையிலெடுத்துக்கொண்டு ஏ5 பாதையூடாக தென்மேற்காக பதுளை மாவட்டத்திலுள்ள மஹா ஓயா எனும் சிங்கள கிராமத்திற்கு மாட்டு வண்டிகளிலும் கால் நடையாகவும் பயணித்தனர். கோப்பாவளி பெரியபுல்லுமலை போன்ற இடங்களிலிருந்தும் முஸ்லிம்கள் தங்களது குடியிருப்புக்களை விட்டு மகா ஓயா நோக்கி சென்று அங்கு அகதிகளாகினர், பின்னரே மெதுமெதுவாக அவர்களில் பலர் போலன்னருவைக்கும் அக்கரைப்பற்று ஏறாவூர் போன்ற இடங்களுக்கும் சென்று குடியேறினர்.

இவர்களில் பலர் இப்போதுதான் கிழக்கில் புலிகளின் அழிவுக்கு பின்னர் தங்கள் கிராமங்களுக்கு மீள்குடியேறி வருகின்றனர். அவ்வாறு உறுகாமம் கோப்பாவளி பெரியபுல்லுமலை போன்ற இடங்களிலிருந்து வெளியேறி மகா ஓயா அரச நிர்வாக கட்டிடத்தில் முகாமிட்டிருந்த பலரை நானும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் (எம்.எச்.எம்.அஸ்ரப்) சிலரும் சென்று பார்வையிட்டோம் அவ்வாறு நாங்கள் மகா ஓயா நோக்கி பயணித்த வழியில் கண்டி ரந்தெனிகல (விக்டோரியா ) பகுதிகளை தாண்டி வாகனங்கள் அதிகம் சென்றிராத மனித நடமாட்டமற்ற வீதிகளினூடாக சென்றபோது ரந்தெனிகல வீதியோரமாக ஜே. வீ. பி இளைஞர்களின் டயரில் எரிக்கப்பட்ட எரிந்தும் எரியாத சடலங்களை பார்த்து மனக்கிலேச முற்றோம். சிங்கள இளைஞர்களின் உடல்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு வீதியோரமெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன. ஜே வீ பியினரை (மக்கள் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தி அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் அவர்களின் குடும்பத்தினர் என்று ஆயிரக்கணக்கான சிங்கள அப்பாவி ஆண் பெண்களை கொன்று குவித்தது பிரேமதாசா அரசாங்கம்.

இருபதாண்டு கடந்துவிட்டபோதும் வந்தாறுமூலை அகதிமுகாமில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சில நடுத்தரவயதினர் உட்பட பலரின் குடும்பத்தினர் அண்மையில் நடத்திய நினைவு கூறல் நிகழ்சிகள் இராணுவம் பற்றிய மனித உரிமை மீறல் பற்றியது மறுபுறம் இன வன்முறைகளால் கொல்லப்பட்ட கடத்தி காணாமல் போன தமிழர் முஸ்லிம்கள் பலர் குறித்து இந்த இருபதாண்டு மனித நடவடிக்கை இயல்போட்டத்துடன் மனித சுபாவமும் சேர்ந்து பலவற்றை மறக்கச்செய்து விட்டது யதார்த்தமே. இன நல்லுறவுக்கும் மீளினக்கத்துக்குமாக ஆணைக்குழுவினை முதலில் சந்திரிக்கா 1983 வன்முறையோடும அதற்கு முதிய பிந்திய உடனடி காலகட்டத்துக்கு மட்டும் (1981-1984 )வரையறுத்து விசாரிப்பதற்காக அவ்வானைக்குழு நியமிக்கப்பட்டது இன்றுள்ள ஆணைக்குழுவும் 2002 தொடக்கம் 2009 வரையுமான கால வரையறைக்குள் செயற்படுகிறது. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களுகிடயிலான சிறு சிறு வன்முறைகள் விசாரனைக்குற்படுத்துவது என்பது இப்போதைக்கு அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் குறிப்பாக இனங்களுக்கிடையே மீளிணக்கம் என்பது கட்டி எழுப்பப்படுவற்கு ஏதுவான சூழல்கள் புலிகளின் பேரழிவுடன் வட கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

நான் சில வருடங்களுக்கு முன்னர் சந்திரிகா அமைத்த உண்மைக்கும் மீளினக்கத்துக்குமான ஆணைக் குழு பற்றி வீரகேசரி பத்திரிகையில் (20.09.2001) எழுதும் போது தமிழ் முஸ்லிம் களுக்கிடையேயும் ஒரு உண்மைக்கும் மீளினத்துக்குமான (Truth and Reconciliation ) ஆணைக் குழுவொன்று அமையலாம் என்று கருத்துரைத்திருந்தேன். அக்கட்டுரையையும் இங்கு இணைத்துள்ளேன். இன்றுள்ள பயங்கரவாத அழிப்பின் பின்னரான கால நகர்வு பல சமுக ரணங்களை சொஸ்தப்படுத்தியிருக்கிறது கடந்த மாகான சபை அமைப்பு அதில் ஏற்பட்ட முதல் அமைச்சர் பதவிபோட்டி அவ்வப்போது ஏற்பட்ட இன முறுகல் சம்பவங்கள் ஓரிரு வன்முறைகள் என்பன இன போட்டபோட்டி முறுகல் நிலைப்பாடுகள் மெதுமெதுவாக குறைந்து செல்லும் தன்மையையும் அவ்வாறான சமூக பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றிய அணுகுமுறைகள் சமூக உடன்பாடுகள் மாற்றமுற்று வருவதனையும் நோக்கும்போது பொருளாதார நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டு வாழ்க்கை தரம் உயர்வடைய சூழல் உருவாகும் போது மனித உறவுகளும் விழுமியங்களும் மேலோங்குகின்றன இதுவே இன முரண்பாட்டு சூழல் வன்முறைகள் நிலவிய நாடுகள் சிலவற்றில் அவதானிக்கப்படும் உண்மையுமாகும மீளினக்கத்துக்கான விசாரணைகள் இனங்களுகிடையில் மீண்டும் உண்மையை வெளிக்கொண்டு வரப்போவதில்லை அவ்வாறு உண்மைகள் வெளிக்கொண்டு வருகின்றதான சூழ்நிலை மீண்டும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துமா அல்லது விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் உண்டு. மேலும் சமுக முரண்பாடுகளை ஆட்கடத்தல் கொலை என்று கொண்டு முடித்தவர்கள் வன்முறைகளை தூண்டிவிட்டவர்கள் இழைத்த குற்றம் இனிமேலும் நடைபெறாமல் இருக்க இப்போதுள்ள சமூக நல்லுறவு சூழல் தக்க முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

வெள்ளைசேட்டணிந்து மக்களை ஏமாற்றி அலைந்து திரியும் புலி வேஷக்காரருக்கு மக்கள் தான் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்!

Sunday, September 18, 2011
வெள்ளைசேட்டணிந்து மக்களை ஏமாற்றி அலைந்து திரியும் புலி வேஷக்காரருக்கு மக்கள் தான் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்!

போராட்டம் என்பது கொள்கையின் அடிப்படையை வைத்து மக்களுக்காக மக்கள் போராடுவது. எங்கள் விடுதலை போராட்டமும் அப்படிதான் அடிமை விலங்கை உடைத்து அப்பாவி மக்களை காக்க வீறு கொண்டெழுந்த, போராட்ட உணர்வுஜீவிகள் ஆயிரமாயிரம் ஏன் இலட்சக்கணக்கென்றே கூறலாம்.மக்களின் மனங்களை வெல்லாமல் புலிகள் தாங்கள் நினைத்த போக்கிற்க்கு போராட்டத்தை திசை திருப்பிச்சென்றதை நாம் கண்முன்னே காணகூடியாதாக இருந்தது.
எம் மண்ணில் மக்கள் படும் துன்பம் என்று விடியல் பெறும் என்று மண்ணில் புதைந்த எங்கள் செல்வங்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு உங்கள் முன் உண்மைச் சம்பவத்தை எழுதுகிறேன்..

வெளிநாடுகளில் வாழும் மக்களின் பலவீனங்களை நாம் அறிவோம் தமது மண்ணில் இரத்த உறவுகளை விட்டுவிட்டு வந்து நாம் பல்வேறு கோணங்களில் மன அழுத்தங்களுடன் வாழ்வதை பயன்படுத்தி…, இங்கு புலிகள் இயக்கத்திற்காக பினாமிகளாக செயல்பட்டுவந்த அதிகமானோர் பல்வேறு வடிவங்களில் மக்கள் சொத்துக்களையும், பணங்களையும் சிலரின் குடும்ப பெண்களின் கற்பை பறித்து பல குடும்பத்தாரின் நின்மதிகளையும் தங்களின் சுயலாபத்திற்காக திருடி வாழ்க்கை நடாத்திவந்துள்ளனர்.

இவைகளை அனைவரும் அறிவோம். அதே போன்று சுவிஸில் இடம்பெற்ற உண்மை சம்பவம்தனை மக்கள் முன் தருகின்றோம்
சுவிஸ் நாட்டில் புலிகளுக்காக பினாமியாக செயல்பட்ட பலர் குலம், அல்பேட், துயா, ரகுபதி, அப்புல்லா, கோட்சுதா கருணா. மாம்பழம், சசி, லகி, கருணாநிதி மூர்த்தி சீலன் பரம், உதயன், காயத்ரி(ஆண்), யசோ, குட்டி, தர்மசீலன், றங்கன், இந்திரன், இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்
இவர்கள் மக்களுக்கு துரோகம் செய்வதில் வல்லவர்கள் என்று பட்டம் வழங்கலாம். நாட்டில் வாழும் மக்களின் புன்னகை மீட்புக்காக வெளிநாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் பணம் சேகரித்து தங்களின் பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் சுவிசில் வீடுகள் அமைக்கவும் பிறரின் மனைவிகளை ருசிபார்க்கவும் பினாமிகள் செலவிட்டு வந்துள்ளார்கள் என்பதற்கு நாம் தரும் ஆதாரங்களும், சிலநாட்களுக்கு முன்னர் பேர்ன் மாநரத்தில் நடைபெற்ற உதயன் என்பவரின் சம்பவமும் எடுத்துக்காட்டாக அமைக்கிறது.

உதயன், யசோ, கருணாநிதி, குட்டி. ஆகிய நால்வரும் ஓரே இடத்தில் தொழில் செய்பவர்கள் ஆனால் காயத்திரி என்பவர் இவர்களின் வலது கையெனவும் நால்வர் தொழில் புரியும் இடத்தருகே தான் காயத்திரியின் இல்லமும்.
அனைவரும் காயத்திரியின் உற்ற நண்பர்கள் எனவும் நாம் அறிந்தோம் காலப்போக்கில் காயத்திரி என்பவர் நண்பர்களை தன்வீட்டுக்கு பகுதி நேரங்களில் வந்து பொகும் படி கூறியதால் இவர்கள் நால்வரும் காயத்திரியில் சொல்லுக்கு மதிப்பளித்து வீட்டுக்கு வந்து போயுள்ளனர்.
3ஆண்டுகளாக காயத்திரியின் வீட்டுக்க வந்து போன இவர்கள் காத்திரியின் மனைவியையும் தங்கள் வசம் இழுத்துக்கொண்டனர். 3 ஆண்டுகள் கணவனுக்கு தெரியாமல் காயத்திரியின் மனைவியும் பஞ்சபாண்டவர்க்கு பாஞ்சாலிபோல் கதை தொடர்ந்து வந்தது சில வாரங்களுக்கு முன்பு காயத்திரினும் கணவன் கருத்தடை மாத்திரை அலுமாரியில் இருந்ததை அவதானித்த கணவன் பஞ்சாபாண்டவரின் மனைவியை அடித்து உதைத்தது உண்மைகளை அறிந்துள்ளார்.
அது மட்டுமல்ல காயத்திரியின் பேரிலும் அவர் மனைவியின் பெயரிலும் தமிழீழம் பெற்று தருவதாக மக்களிடம் பெற்ற பணங்கள் உதயன் என்ற வெள்ளைசேட்டு பினாமி பலஇலட்சம் சுவிஸ் பணங்களை இட்டு வந்ததாக தெரிவருகிறது. மக்கள் எத்தனையோ துன்பங்களால் இன்னல் பட்டு உழைத்த பணங்கள் வெள்ளைசேட்டு அணிந்த பினாமிகள் மக்களின் பணங்களை சீர்கெட்ட வழிகளில் செலவு செய்துள்ளனர்

தமிழீழம் பெற்று தருவதாக மக்களிடம் பெற்ற பணங்கள் எவ்வாறு செலவிடப்பட்டது தெரியுமா மக்களே அறிந்து கொள்ளுங்கள் மக்களே…..
(1)குலம்.. சுவிஸில் புலிகளின் பொறுப்பாளராகவும் திருமணம் செய்யாமல் ஒருபெண்ணுடன் ஊர் சுற்றியது
(2)அல்பேட்.. மேடைகளில் பினாமிகனின் பேச்சாளராகவும் இருந்து இன்று செங்காளனில் பாரியளவில் வியாபரத்தளம் அமைத்ததுள்ளார்
(3)ரகுபதி…. பலஇலட்சங்களுக்கு அதிபதி தான் வசிக்கும் மாநகரில் வீடு கட்டியமை
           (4)அப்துல்லா.. மக்கள் பணத்தைசூரையாடி சிங்களிப்பகுதிகளில் காணிகள் வேண்டியமை
(5)கோட்சுதா.. மக்களை அச்சுறுத்தி என்றும் களைபுடுங்குவோம் என்ற வாக்கியத்தை பயன் படுத்த பலஆயிரக்கணக்கான பணங்கள் இவர் ஏமாற்றியுள்ளான் மற்றான் மனைவியுடன் குடும்பம்நடாத்துவதில் வல்லவர் பலயுக்திகளில் மக்கள் பணங்களை ஏமாற்றியமை
(6)கருணா.. தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் இலட்சக்கணக்கான பணங்களை தனது மனைவியின் நாமத்தில் கொழும்பில் வீடுகள் வேண்டியமை

(7)மாம்பழம்.. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மக்கள் பணங்களை வங்கிகள் மூலம் போலிபத்திங்களை வழங்கி மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்மை

(8)சசி… பலஆண்டுகளாக பினாமிகளின்தலைவனாக செயல்பட்டமை உண்டியல் சேவைக்காக சுவிஸ்நாட்டில் பேர்ன் நகரில் வியாபார தளம் அமைத்துள்ளமை இங்கு முக்கியமா குறிப்பபிடத்தக்கது

(9)லகி.. இவர் வெள்ளைசேட்டு அணிந்து மக்களிடம் பணம் வசூலிப்பதில் வல்லவர் தற்பொழுது மிக்சர் முறுக்கு சாப்பாட்டு கடை நடாத்தி வருகிறார்

(10)கருணாநிதி… பல ஆண்டுகளாக பணம் வசூலித்த இவர், தனது பெற்றோர் சகோதரர்களை பத்து வருடங்களுக்கு முன்னரே. இந்தியாவில் கூப்பட்டு வைத்து பராமரித்து வந்துள்ளார். தற்பொது தனது மைத்துனரை தனது இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார் மைத்துனர் பத்திரம் இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..மக்களை அச்சுறுத்துவதில் வல்லவர் பலவகையான யுக்திகளை பயன் படுத்துவதிலும் வல்லவர்

(11)குட்டி. . இவர்குலத்தில் காவலாளி கைத்தடி 2004 ஆண்டு வெள்ளைசேட்டுகாரர்களினால் நடாத்தப்பட்ட ஜெனீவா ஊர்வலத்தில் குலம் அவர்களுக்கு காவல் புரிந்தவர் பலரிடம் அடியும் வாங்கியவர்

(12)மூர்த்தி.. இவர் பலபொது இடங்களில் நின்று பணம் சேகரிப்பவர் கோயிலகள் கடைகள். அவரின்பணம் சேகரிப்பு நிலையங்களாகும் இவரும் பல இலட்சக்கணக்கான பணங்களை சூறையாடியுள்ளார்

(13)சீலன்… இவரின்யுக்தி சிரிப்புக்கிடமானது இவர் மக்களிடம் பெற்ற பணங்களில் சகோதரன் பெயரில் இலண்டனில் பெற்றோல் நிலையம் வேண்டியுள்ளார் மக்களே ஆதாரம்

(14)பரம்.. கோயில் பக்தி முத்திகடவுளின் பணங்களை தந்திரமாக எடுத்து தனது பெயரில் பலவீடுகள் அமைத்துள்ளார் மக்களே இவைகளுக்கு ஆதாரம்

(15)றங்கன்… மக்கள் பணங்கள் என்றால் இவருக்கு கொள்கை ஆசைசேகரிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு உழைப்பதில் வல்லவர் இவர் கொழும்பில் மக்கள் பணத்தில் பெரிய மாளிகை வாங்கியுள்ளது தெரியதந்துள்ளது

(16) இந்திரன்.. இறுதிவரைக்கும் மக்கள் மத்தியில் பணங்கள் சேகரித்தவர் விடுதலைபோராட்டத்ததை பற்றி அறிஞர் போர்வையில் கதைத்து பணம் சேகரிப்பவர்

(17) யசோ… இவர் வெள்ளைசேட்டு என்றால் பிடித்தமானது ஒன்றாகும் பலஇடங்களில் மக்களை அச்சுறுத்தி பணம் பெறுவதில் வல்லவர் குலத்தின் காவலாளியும் கூட இவர் மக்களிடம் சேகரித்த பணத்தில் இவரின் மனைவிபெயரில் இலங்கையில் பலசொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

(18) உதயன். . இவர்தான் கதையின் கதாநாயகன். பிறர்மனைவியை அபகரித்த கயவன். காயத்திரி என்ற தனது நண்பனின் மனைவியை அனுபவித்துவிட்டு நண்பனுக்கு தனது விடையம் தெரிந்து விட்டபடியால் தான் அனுபவித்த பெண்ணின் நண்பனையே பிறரின் துணையுடன் ஆயுதமுனையில் அச்சுறுத்திக்கொண்டு அலைபவர் பல

குடும்பங்கள் பிரிவதற்க்கு இவர் காரணமானவர் மக்கள் பணத்தில் இரண்டு வீடுகளை சுவிஸில் அமைத்து வருவதாக தெரியவருகிறது

(19)காயத்திரி.. இவர்தான் உதயன் அனுபவித்த பெண்ணின் கணவன். இவர் ஓர் அப்பாவி இவர்வெகுசீக்கிரம் மற்றவர்களை நம்புபவர் அப்பாவித்தனமும் நேர்மையான ஒரு மனிதனும் நம்பிக்கையானவரும்கூட, இவருக்கு 2 பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் மனைவி சீர்கொட்டபெண்ணாக இருந்தாலும் தனது பிள்ளைகளுக்கா இன்றும் போராடிக்கொண்டு இருக்கிறார்

போராட்ட உணர்வு கொண்ட மக்களே உங்களை தங்களின் சுயனலத்திற்காக பயன்படுத்தி துன்பப்படும் மக்களின் அவலம் அறியாது போராட்டம் என்ற போர்வையில் தங்களின் தலைமைகளையும் ஏமாற்றி அப்பாவிமக்களின் பணத்தைசூறையாடி ஒன்றுமறியா அப்பாவிகளின் மனைவிகளின் கற்பைசூறையாடி தங்களின் வாழ்வை வழப்படுத்தியவர்களுக்கு உங்களின் தண்டணை என்ன?

எங்கள்மக்கள் தான் வெள்ளைசேட்டணிந்து ஏமாற்றி அலைந்து திரியும் வேஷக்காரருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்
உண்மைகள் என்றும் மக்களை சென்றடையவேண்டும்
மக்கள் சக்தி மாமலை தனை புரட்டும் சக்தி


மக்கள் நலன் விரும்பி

இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று

Sunday, September 18, 2011
இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது. சிலிநெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்படையின் போர் பயிற்சிகள் 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்த போர் பயிற்சியானது இலங்கையின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான போர் பயிற்சி என இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர், டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு சொந்தமான 4 கப்பல்கள் இந்த போர் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளன.இலங்கையுடன் ராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த கடற்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.